السبت، 24 سبتمبر 2011

புவியியல் துறை-குதாமா

ஈராக் நாட்டை சேர்ந்த குதாமா இப்னு ஜாபர் அல்காத்திப் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளர். கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய, குதாமா பாக்தாதில் அரசின் கணக்கராகப் பணியாற்றினார்.

இவர் கி பி 928 இல் கிதாபுல் கராஜ் என்ற பெயரில் நிலவரி பற்றிக் கூறும் நூல் ஒன்றினை எழுதினார். இந்நூலின் பதினோராம் அத்தியாயத்தினை அப்பாஸிய ராஜ்யத்தின் தபால் நிலையங்களையும் பாதைகளையும் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

இந்நூலின் பிரதான நோக்கம் இஸ்லாமிய ராஜ்யத்தைப் பற்றியும் குறிப்பாக பைசாந்திய ராஜ்யதோடு ஒட்டிய எல்லைகளைப் பற்றியும் விளக்கி கூறப்பட்டுள்ளது. இவரது நூல் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக இருந்தும், எல்லைப் பாதுக்காப்பு போன்ற மிக முக்கியமான விசயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு எழுதப்பட்ட ஒன்றாகும். அப்பாஸிய ராஜ்யத்தை சூழவுள்ள ராஜ்யங்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதார, கலாசார, பண்பாடு போன்ற வர்ணனைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து உள்ளது.

الثلاثاء، 20 سبتمبر 2011

புவியியல் துறை - அல் இஷ்தக்ரி

கி.பி.பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவரான இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஒன்றும் தெரிய வில்லை. இவர் அதிக அளவு பயணம் செய்து தனது அனுபவங்களை பின்பற்றி அல்-மஸாலிக் வல் மமாலிக் என்னும் நூலை எழுதி உள்ளார். இந்நூல் முக்கியமாக அல் பல்கியால் எழுதப்பட்ட ஸ்வருல் அகாலிம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்த நூலில் வரை படங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் தனிதனி வர்ணம் தீட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இவரது படங்களில்
மத்திய தரைக்கடல் வட்டமாக அல்லது நீள்வளைய வடிவில் காணப்படுகிறது. இப்படங்கள் பல்கியால் வரையப்பட்ட படங்களை ஒத்து இருக்கின்றன.
பல்கி குழுவைச் சேர்ந்த ஏனைய புவியியல் வல்லுனர்களுக்கு இவரது நூல் நம்பகமான தகவலை தரக்கூடிய ஆக்கமாகத் திகழ்ந்து இருக்கிறது. இந்த நூல் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கபட்டதோடு- பாரசீக மொழியில் புவியியல் நூல்கள் பலவற்றிற்கும் அடிப்படையாகவும் அமைந்து இருப்பதாகவும் புவியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Estakhri